பிரதான செய்திகள்

சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மற்றவர்களிடம் உடைகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வருகின்றனர்.

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வியத்புர திட்டத்தில் தற்காலிகமாக வீடுகள் வழங்கப்படும் என அரசாங்கத்தின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க நேற்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பிரதம கொறடா, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில்,

“போதைக்கு அடிமையானவர்களும், கஞ்சாக்கு அடிமையானவர்களும் எங்கள் வீடுகளை அழிக்கும்போது, அதன் பின்னால் இருந்த அரசியல் கட்சிகளும் இன்று இங்கு உள்ளன. சில பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மற்றவர்களிடம் உடைகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். எனவே அவர்களுக்கு அந்த வீடுகளை தற்காலிகமாக வழங்க நாம் நடவடிக்கை எடுப்போம். அரச சொத்துக்களுக்கு தீ வைத்தவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்படுகின்றனர். எமது பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த இன்றும் விளக்கமறியலில் உள்ளார்.

Related posts

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அமைச்சர் றிஷாட் உதவி

wpengine

வன்னியில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 3 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும்.

wpengine

அதிபரின் அடாவடி தனம் தமிழ் பாட ஆசிரியை தற்கொலை

wpengine