பிரதான செய்திகள்

சில கட்சிகள் அரசாங்கத்தின் கைக்கூலி! 16 பேருக்கு எதிர்க்கட்சி பதவி

சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,
புதிய முறையில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு நடந்து முடிந்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அது நடக்குமா, நடக்காதா என்பது தெரியாது.

இந்த தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னர் சிலர் 2020ஆம் ஆண்டு தேர்தலை பற்றி பேசுகின்றனர். எனினும் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தல், மாகாண சபைத் தேர்தல் என்பவற்றுடன் நாங்கள் பொதுத் தேர்தலையும் நடத்துமாறு கோருகிறோம்.
எங்களிடம் 54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

நாங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது 16 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள கட்சிகே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

16 பேர் இருக்கும் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கியதுடன் 6 பேர் உள்ள கட்சிக்கு எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியை வழங்கியுள்ளனர்.

இவர்கள் அரசாங்கத்தை நடத்தி செல்ல தொடர்ந்தும் உதவி வழங்கி வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஆளும் கட்சியினர் எனவும் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொதுவான அரசாங்கத்திலும் திருடர்கள் போல்! இன்றைய அரசாங்கத்திலும் திருடர்கள்

wpengine

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

Editor

அமைச்சர் ஹக்கீம் கிளிநொச்சிக்கு விஜயம்

wpengine