பிரதான செய்திகள்

சிலோன் முஸ்லிம் இணையத்தள செய்தி ஊடக அலுவலகம் மீது சிறு ஒயில்வீச்சு

அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள சிலோன் முஸ்லிம் தலைமை ஆசிரியர் பீட அலுவலகம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டதாக எமது அலுவலக மேற்பார்வையாளர் தெரிவித்தார்,

இன்று காலை அலுவலகத்தை சுத்தம் செய்ய ஆரம்பித்த பொழுது இந்த தாக்குதல் குறித்து அறிந்து கொண்டதாக எமது அலுவலக பொறுப்பாளர் முஹம்மட் தெரிவித்தார், அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அலுவலகத்தின் கண்ணடாடிகள் உடைக்கப்பட்டு பிரதான பதாதை உள்ளிட்ட மேலும் சில பதாதைகளுக்கு ஒயில்வீசு்சும் இடம்பெற்றுள்ளது, அலுவலகத்தை உடைத்து உள்ளே நுழைய முற்பட்டிருக்கலாம் என குறபிப்பிட்டார். குறித்த சம்வத்தினால் உள்ளே இருந்த பொருட்களுக்கு சேதம் எதுவுமில்லை எனவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் பிரதம ஆசிரியரும் சிலோன் முஸ்லிம் ஊடக பிரதானியுமான பஹத் ஏ.மஜீத் கருத்து தெரிவிக்கையில் குறித்த சம்பவம் தொடர்பில் கவலையடைகிறேன், கடந்த 05 வருடங்களாக இந்த இணைய ஊடகத்தை முன்னின்று நடாத்தி வருகிறேன், இன்றுதான் அதிகம் கவலையடைந்த தினம், (11.07.2017) உண்மைச் செய்திகளை பிரசுரிப்பதாலும் சமூகத்திற்கான பணி செய்வதாலும் எமக்கு கிடைத்த பரிசு இது என குறிப்பிட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பில் உள்ளுர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி தொடர்பாடள் சன்சீர் தெரிவித்தார். சிலோன் முஸ்லிம் ஊடக அமைச்சு மற்றும் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுதந்திரக் கட்சியின் ‘கை’ சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் – நிமல்

wpengine

அய்யூப் அஸ்மின் அமைச்சர் றிஷாட்டை விமர்சிப்பதன் மூலம் தமிழ் கூட்டமைப்பிடம் எதிர்பார்ப்பது என்ன?

wpengine

இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்குச் சட்டம்

wpengine