பிரதான செய்திகள்

சிலாவத்துறை வீட்டுத்திட்ட அழைப்பிதழ் வட மாகாண சபை உறுப்பினர்,முசலி பிரதேச உறுப்பினர்கள் பெயர் நீக்கம்

சிலாவத்துறையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று சனிக்கிழமை (05.05.2018) காலை 11 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வர்த்தக, கைத்தொழில் அமைச்சர் அல்ஹாஜ் ரிசாட் பதியுதீன் கலந்து கொள்கிறார்.

அத்துடன் கௌரவ அதிதியாக இலங்கைக்கான ஐக்கிய அரபு இராஜ்யத்தின் தூதுவர் வருகை தருகிறார்.

இத்திட்டத்தின் முதற்கட்டமாக 43 வீடுகளும் 4 கடைகளும் 2 வகுப்பறைக் கட்டடங்களும் தொழுகைக்கான பள்ளிவாசலும் அமைக்கப்படவிருக்கின்றது. மொத்தமாக 70 வீடுகள் கட்டப்படும்.

இத்திட்டம் ஐக்கிய அரபு இராஜ்ய (UAE) மக்களின் நன்கொடை நிதியுதவின் மூலம் கான் கட்டுமான நிறுவனத்தினால் இலங்கைக்கான எமிரேட்ஸ் நாட்டு தூதரகத்தினூடாக நடைமுறைப்படுத்தப்படும்.

சிலாவத்துறை பெரிய பள்ளிவாசல் இத்திட்டத்தின் இணைப்புப் பணிகளை மேற்கொள்ளும்.

முகுசீன் றயீசுத்தீன்
பிரதித் தவிசாளர்
முசலி பிரதேச சபை

 

குறிப்பு 

இன் நிகழ்வின் அழைப்பிதழில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முசலி வட மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் பெயரும்,முசலி பிரதேச சபையில் உள்ள ஏனைய பிரதேச சபை உறுப்பினர்களின் பெயர் இல்லை எனவும் அறியமுடிகின்றன.

Related posts

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை! ஏமாற்று நாடகமா?

wpengine

அமைச்சர் ஹக்கீமினால் வழங்கப்பட்ட சட்ட முரணான தொழில் விசாரணை

wpengine

டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியை தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்படும்.

wpengine