(முசலி ஊரான்)
சிலாவத்துறை பிரதான சந்தியில் அமைக்கபெற்றுள்ள புனித அந்தோனியார் திருச்சுரூபம் காணாமல் போய்விட்டதாக சில நாற்களுக்கு முன்பு சிலாவத்துறை பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யபட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அதற்கு பதிலாக அரிப்பு,சிலாவத்துறை மற்றும் சரோரியார்புரம் ஆகிய கிராமங்களில் உள்ள சில கிறிஸ்தவ மத தலைவர்கள் மற்றும் சில மக்கள் ஒன்றாக சேர்ந்து புதிய திருச்சுரூவம் ஒன்றை அமைத்துள்ளார்கள்.
இந்ந விடயம் தொடர்பில் வடமாகாணத்தில் முஸ்லிம்கள் பெறும்பான்மையாக வாழும் முசலி பிரதேச மக்கள் தொடர்புகொண்டு வினவிய போது
1990ஆம் ஆண்டு காலபகுதியில் பாசிச புலிகளினால் முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றபட்ட போது சிலாவத்துறை பிரதான சந்தியில் தற்போது இருக்கின்ற இந்த திருச்சுரூவம் காணப்படவில்லை என்றும் வடக்கில் முஸ்லிம்கள் பெறும்பான்மையாக வாழும் முசலி பிரதேசத்தில் இப்படியான சிலைகள் இருப்பதை நாங்கள் வண்மையாக கண்டிக்கின்றோம்.
இந்ந சிலையின் காரணமாக சிலாவத்துறை பிரதான சந்தியின் போக்குவரத்து மிகவும் கஷ்டமாக உள்ளதுடன், விதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக பிரதான விதியின் சுற்றுவட்டாரம் திருத்த வேலைகள் மேற்கொண்ட போது இந்த சிலை பாரிய தடையாக இருப்பதன் காரணமாக இந்த வேலை இன்னும் பூர்த்தி செய்யமுடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இப்படியான சிலைகள் முசலி பிரதேசத்தில் உள்ள பிரதான இடங்களில் தொடராக அமைக்கபெற்று வருவதாகம் அறியமுடிகின்றது.