பிரதான செய்திகள்

சிறையில் உள்ள மாணவர்களை சந்தித்த இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

பௌத்த விரையின் மேல் ஏறி படமெடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் சந்தித்துள்ளார்.
அனுராதபுர சிறைச்சாலைக்கு இன்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் குறித்த மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதன் போது அமைச்சர் கூடிய விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்திலுள்ள தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகளை சந்தித்து குறித்த மாணவர்களின் விடுதலை தொடர்பிலும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அத்தோடு அங்கு வருகை தந்திருந்த கைதுசெய்யபப்பட்ட மாணவர்களின் பெற்றோருடனும் கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது சட்டத்தரணி ஏ.எம்.ஹபீப் றிபான் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நெளபர் ஏ. பாவா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

Related posts

சுயஸ் கால்வாய் தடங்கலால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

Editor

வவுனியா மாநகரசபையின் புதிய ஆணையாளர் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

Maash

இனவாதம் பேசித்தெரியும் விக்னேஸ்வரனை கைது செய்ய வேண்டும்.

wpengine