பிரதான செய்திகள்

சிறைத்துறையில் 1,663 பணியிடங்கள் வெற்றிடம்!

சிறைத்துறையில் 1,663 பணியிடங்கள் காலியாக உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு மொத்தம் 7,872 பணியாளர்கள் தேவைப்படுவதாகவும், எனினும் தற்போது 6,209 ஊழியர்களே பணிபுரிவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் அரசாங்க கணக்காய்வு சபைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு தேவைப்பட்டால், அது தொடர்பான திட்டங்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு சிறைத்துறைக்கு குறித்த குழு தெரிவித்துள்ளது.

Related posts

அடுத்த அரசாங்கத்தில் சட்டத்தரணி அலி சப்றி நீதி அமைச்சர்

wpengine

அக்கரைப்பற்று பிரதி மேயர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது

wpengine

மன்னாரில் இன்று 9 மணி நேர நீர் வெட்டு

wpengine