பிரதான செய்திகள்

சிறுவர் துஷ்பிரயோகங்கள் உடனடி தொடர்பு WhatsApp உட்பட

இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அல்லது வேறு துஷ்பிரயோகங்கள் குறித்து, முறையிட புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய 077 32 20 032 என்ற கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்பதன் மூலமோ, குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலமோ விபரங்களை அறிவிக்க முடியும்.

மேலும் வைபர், வட்ஸ் அப் மூலமும் இந்த இலக்கத்தைப் பயன்படுத்தி முறையிட முடியும் என, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இணையம் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஊடாக மேற்கொள்ளப்படும் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் அல்லது வேறு துஷ்பிரயோகங்கள், அதிகரித்து வருவதாலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த தொலைபேசி இலக்கம் நாளை முதல் ஆகஸ்ட் 22ம் திகதி வரை 24 மணித்தியாலங்களும் சேவையில் இருக்கும் என, சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கூறியுள்ளது.

Related posts

தவிசாளர் தெரிவு! முசலி பிரதேச சபை உப தலைவருக்கு முன்னால் உறுப்பினர் வழங்கிய பதிலடி

wpengine

அரச அதிகாரிகள் ஜப்பான் செல்ல வாய்ப்பு!

Editor

“பெண்கள் விற்பனைக்கு உண்டு” என பேஸ்புக் பக்கம்

wpengine