Breaking
Fri. Nov 22nd, 2024

டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும், தத்தமது குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பெற்றோர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால் பாடசாலைகள் அல்லது பகல்நேர பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்ப வேண்டாம் எனவும் வைத்தியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சிறுவர்களிடையே மர்மக் காய்ச்சல் வேகமாக அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

A B

By A B

Related Post