Breaking
Sun. Nov 24th, 2024

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை மற்றும் வளர்ப்புத்தாய் ஆகிய இருவருக்கும் பிணை வழங்கக் கூடாது எனக் கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று 21 நேற்று திங்கட்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மேற்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,தேசிய தௌஹீத் ஜமாஅத் பிரச்சாரகர் மௌலவி ஸஹ்றான் மஸ்ஊதி ஆண்கள்,பெண்கள் பொது மக்கள்,இளைஞர்கள்,சிறுவர் சிறுமிகள் உட்பட தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு கண்டன ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டோர் வித்யா,சேயா,சீமா,யுஸ்ரி என வன்கொடுமைக்கு சட்டத்தை நிலைநாட்டு,கொடுமைக்கு துணை நின்றவனுக்கு பிணை வழங்காதே,நீதிமன்றமே அரக்கி மும்தாஜிக்கு பிணை வழங்காதோ,ரப்பாணி மஜீதிக்கு அதிக பட்ச தண்டனை வழங்கு,யுஸ்ரியின் நிலை இனிமேல் நடக்க இடமளிக்காதே,நீதி கொடு,நீதி கொடு இந்த அப்பாவிச் சிறுமிக்கு நீதி கொடு,சீமாவைப் படுகொலை செய்த ஐ.எம்.ரமழானை தூக்கிலிடு,நீதி மன்றமே மும்தாஜின் கொடூர செயலுக்கு அதிக பட்ச தண்டனை நிறைவேற்று,இந்த அரக்கிக்கு தண்டனை வழங்குமா நீதிமன்றம்,ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம் இன,மத மொழிக்கு அப்பால் அநீதிக்கு எதிராக ஒன்றுபடுவோம் போன்ற பல்வேறு தமிழ்,சிங்கள ஆங்கில மொழிகளிளான பதாதைகளை ஏந்தியிந்தனர்.21837e8d-ac38-4a34-944d-97b75f16b68d

ஆர்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.dbf1bd1e-8473-4e39-986e-fae2ebb89fe1

 

மேற்படி 10 வயது சிறுமிக்கு சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமியின் வளர்ப்புத்தாய் மற்றும் தந்தை ஆகிய இருவருக்கும் எதிர்வரும் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா கடந்த 14 திங்கட்கிழமை உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.e7f36285-e30a-451c-8a68-649d5e8a9c5b53369267-5a95-4d5e-819d-79865c4d21f6

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *