பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகளை இந்தியா வழங்க நடவடிக்கை

இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சிறுபோக செய்கைக்கு தேவையான உர வகைகள் போன்றவற்றை காங்கேசன் துறை துறைமுகத்தின் ஊடாக எடுத்து வருவது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.

தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர், கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.-

Related posts

மட்டக்களப்பு மக்கள் சந்திப்புக்களிலும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டுக்கு பெரு வரவேற்பு!

wpengine

மஹிந்தவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது!

wpengine

வட மாகாண தொண்டராசிரியர்கள் சாகும்வரையிலான போராட்டம்

wpengine