கட்டுரைகள்பிரதான செய்திகள்

சிறுபான்மை தலைவர் மீது குறிவைக்கப்படுகிறது அதிலும் குறிப்பாக முன்னால் அமைச்சரை

முஹம்மட் மனாசிர்,
சம்மாந்துறை.

“தற்கால அரசியலின் பேசு பொருள் என்றால் அது ரிஷாதே!”
இலங்கை அரசியலில் சிறுபான்மைத் தலைவர்களை குறிவைத்து, பெரும்பாண்மை மக்களின் வாக்குகளைப் பெற எத்தனிக்கும் முயற்சியில் இவ்வரசானது பெருமளவு முயற்சியெடுத்து, அம்முயற்சியில் வெற்றியும் கண்டனர்.

அப்படியிருந்தும் ஏன் சிறுபான்மை தலைவர்கள் மீது குறிவைக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக, முன்னாள் அமைச்சர் ரிஷாத்தை நோக்கி இத்துணை அம்புகள் ஏய்யப்படுகின்றது என ஆராயலாம்.

கடந்த அரசாங்க காலத்தில் ஜனநாயகத்திற்கு விரோதமாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களை பிரதம மந்திரியாக்க, பாராளுமன்ற பெரும்பாண்மை தேவைப்பட்டது. அச் சமயத்தில் பல சிறுபான்மை கட்சித் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதிலே முன்னாள் அமைச்சர் ரிஷாத்துடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தார்கள். எவ்வாறான பேச்சுவார்த்தை என ஆராய்ந்தால், அன்று அமைக்கப்பட்ட அரசிற்கு ஆதரவளிக்குமாறும், முஸ்லீம் காங்கிரசின் மூன்று உறுப்பினர்களையும் அ.இ.ம.கா வில் இணைப்பதாகவும் முஸ்லீம் சமூகத்தின் தனிக்காட்டு ராஜாவாகவும், பலமான அமைச்சுப்பதவி ஒன்றையும் வழங்குவதாகவும் கூறியிருந்தார்கள்.
ஆனாலும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் ஒத்துப்போகவில்லை. ஜனநாயகத்தை மதிப்பதாகவும், மக்களாணையை மதிப்பதாகவும் கூறி அவ்வரசிற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டார்.

அன்று தொடக்கம் இன்று வரை தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில, இனவாத சிந்தனை கொண்டவர்கள் பெரும்பாண்மைச் சமூகத்தின் மத்தியில் இனவாதியாக காட்டி வருகின்றனர்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுடனும், ரிஷாதை தொடர்புபடுத்தி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெருவாரியான பெரும்பாண்மை வாக்குகளை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டனர். எதிர்வரும் பொதுத் தேர்தலிலும், ரிஷாதை குறிவைத்தே, தேர்தல் முன்னெடுப்புகளை அவதானிக்க முடிகிறது. அன்றே இவ் அரசுடன் ரிஷாத் இணைந்திருந்தால் இத்தனை நெருக்குவாரங்களுக்கும் முகம் கொடுத்திருக்க வேண்டியிருக்காது.

இவ் அரசிலும் பலம் பொருந்திய அமைச்சுப்பதவியுடனும் ராஜாவாக வலம் வந்திருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Related posts

ரமலான் வழிபடும் மாதமே தவிர வழிகெடுக்கப்படும் மாதமல்ல.

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏமாந்துபோன பெண்கள் 10 வீதம் தெரிவு

wpengine

சவூதி அரேபியாவில் மகளிர் தின கொண்டாட்டங்கள்

wpengine