பிரதான செய்திகள்

சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உப ஜனாதிபதி முறை தேவை;மனோ

உத்தேச புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் சிறுபான்மை இனத்தவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உப ஜனாதிபதி பதவி ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட நான்கு சிறுபான்மைக் கட்சிகள் அரசியலமைப்பு நடவடிக்கை குழுவிடம் யோசனை முன்வைத்துள்ளன.

தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகள் இணைந்து இந்த யோசனையை முன்வைத்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த யோசனை புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளடக்கிய பின்னர் சிறுபான்மை மக்களின் பிரச்சினையை நேரடியாக கூறமுடியும்.

இதன் மூலம் சிறுபான்மை மக்களின் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது.

நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை காண உப ஜனாதிபதி பதவியை ஏற்படுத்த வேண்டியது முக்கியமானது.

நாடாளுமன்ற பதவிக்காலத்தை கவனத்தில் கொண்டு இந்த உப ஜனாதிபதி பதவியை சிறுபான்மை மக்கள் காலத்திற்கு காலம் பகிர்ந்து கொள்ளும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கூட்டமைப்பு முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் குறித்து கவனம் செலுத்தவில்லை சுமந்திரன்

wpengine

மஹிந்த,கோத்தாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

wpengine

ஞானசார தேரருக்கு மன்னிப்பு! சிந்திக்குமாறு சட்டத்தரணிகள் கோரிக்கை

wpengine