பிரதான செய்திகள்

சிறுபான்மையினருக்கு எதிராக அல்ல! இராணுவ முகாம்கள் அப்படியே இருக்க வேண்டும்

நாட்டிற்குள் எந்த அபிவிருத்தி பணிகளை செய்தாலும் தேசிய பாதுகாப்புக்கு எந்த தடையும் ஏற்படக் கூடாது என மல்வத்து பௌத்த பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் தெரிவித்துள்ளார்.


முழு நாட்டையும் அபிவிருத்தி செய்யும் போது வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவ முகாம்களை அப்புறப்படுத்தக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

தன்னை சந்திக்க வந்த உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் விமலதம்ம தேரர் இதனை கூறியுள்ளார்.

தாம் இன்றி சிங்கள பௌத்த தலைவரை தெரிவு செய்ய முடியாது என சிறுபான்மையினர் நினைத்தாலும் அந்த நிலைமை தற்போது மாறியுள்ளது. நாட்டை அபிவிருத்தி செய்யும் போது, எந்த வகையிலும் சிறுபான்மையினரை மறக்கக் கூடாது.

சிறுபான்மையினருக்கு எதிராக அல்ல, நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாட்டில் இருக்கும் இராணுவ முகாம்கள் அப்படியே இருக்க வேண்டும் எனவும் விமலதம்ம தேரர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யோஷிதவுக்குப் பிணை

wpengine

சமுர்த்தி விட்டுதிட்ட நிதி மோசடி! விசாரணை வெளியிடப்படவில்லை

wpengine

முல்லைத்தீவு காணி பிரச்சினை ஜெனிவாவில் – வடக்கு மனித உரிமை அமைப்பு

wpengine