பிரதான செய்திகள்

சிறுநீரகம் பாதிப்பு! அவசரமாக இவருக்கு உதவி செய்யுங்கள்

நீர்கொழும்பு, கொச்சிக்கடை, பலகத்துறையைச் சேர்ந்த M.K. ரஹ்மத்துல்லாஹ் தனது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட  நிலையில் தீவிர சிகிச்சைப் பெற்று வருகிறார்.இவர் அல்ஹாபில் ஆர்.எம். ரஹ்னான் (மனாரி)யின் தந்தையும் ஆவார்.

ஒரு மாத காலத்திற்குள் இவருக்கான மாற்று சிறு நீரகங்கள் பொருத்தப்பட வேண்டுமென வைத்தியர்கள் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

 

இவரது சிறுநீரக சிகிச்சைக்கு சுமார் 26 இலட்சம் ரூபாய்கள் தேவையென வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். குடும்ப நிலை காரணமாக அவரிடமோ, அவரது குடும்பத்தினரிடமோ போதிய நிதி இல்லை.

இந்நிலையில் குறித்த குடும்பத்தினர் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் முலிம்களின் உதவியை நாடுகின்றனர்.

சிறு துளி, பெரு வெள்ளம் அல்லவா? ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்வதன் மூலம்  நிதியை திரட்டமுடியும். அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடைகளில் இருந்து, ஒரு நோயளிக்ககு உதவினோம் என்ற திருப்தியுடன், நன்மையும் கிட்டும்.

Related posts

“நான் திருமணம் செய்து கொண்டால் விளக்கும் கோரி நிதி மோசடி விசாரணைப் பிரிவு என்னை அழைக்கும்”

wpengine

புலமைசார் சொத்து விழிப்புணர்வு நாளை அமைச்சர் றிஷாட் (படம்)

wpengine

சக்தி தொலைக்காட்சியில் கலந்துகொள்ளாத முஸ்லிம் மௌலவிமார்கள்

wpengine