பிரதான செய்திகள்விளையாட்டு

சிம்பாப்வே அணி 304 ஓட்டங்களால் வெற்றி!

அமெரிக்காவுக்கு எதிரான உலக கிண்ண தகுதிகாண் கிரிக்கட் போட்டியில் சிம்பாப்வே அணி 304 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிப்பெற்ற அமொிக்க அணி முதலில் களத்தடுப்பை தொிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 50 ஓவா்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 408 ஓட்டங்களை பெற்றது.

சிம்பாப்வே அணி சாா்பில் அணியின் தலைவா் Sean Williams அதிகபட்சமாக 174 ஓட்டங்களை பெற்றதுடன் Joylord Gumbie 78 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தாா்.

அமெரிக்க அணி சாா்பில் Abhishek Paradkar 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினாா்.

பின்னா் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமொிக்க அணி 25.1 ஓவா்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Related posts

தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்வதற்கு தடை

wpengine

செப்டெம்பர் 15ம் திகதிக்கு முன்னர் தேர்தலொன்று நடத்தப்படும் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு!

Editor

சமூக வலைத்தளங்களில் Faceapp Challenge பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

wpengine