பிரதான செய்திகள்

சிங்கள மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகளை தடுத்த தமிழ் மாணவர்கள்.

( ரி.விரூஷன் )

யாழ். பல்கலைக்கழத்தின் விஞ்ஞானபீடத்திற்கு காலவரையறையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரத்தினம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட விஞ்ஞானபீட மாணவர்களை இரண்டாம் வருட விஞ்ஞானபீட மாணவர்கள் வரவேற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது வழமையாக இந்நிகழ்வுகளுக்கு தமிழர் பாரம்பரியத்தின் பிரகாரம் மேளதாள நாட்டியத்துடனேயே விருந்தினர்களை வரவேற்றிருந்தனர்.

இருந்த போதிலும் இம்முறை இந்நிகழ்விற்கு வழமைக்குமாறாக சிங்கள மாணவர்கள் கண்டிய நடனத்தை நடாத்தி விருந்தினர்களை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் சிங்கள மாணவர்களுடைய இவ் ஏற்பாட்டை தமிழ் மாணவர்கள் எதிர்த்திருந்த போதும் அதனையும் மீறி சிங்கள மாணவர்கள் நிகழ்வை நடாத்த ஆரம்பித்தனர். இதன்போது தமிழ் மாணவர்களுக்கும் சிங்கள மாணவர்களுக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு அது பாரிய கலவரமாக வெடிக்க ஆரம்பித்தது.

இதனையடுத்தே பல்கலைகழத்தின் விஞ்ஞானபீடத்திற்கு காலவரையின்றி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைகழக விடுதிகளில் உள்ள சிங்கள மாணவர்களை அவர்களது பாதுகாப்பை கருத்திற்கொண்டு வெளியேறுமாறும் துணைவேந்தர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை யாழ் பல்கலைகழக நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சீ.வி.விக்னேஸ்வரனால் திறக்கப்பட்ட விடுதியின் அவல நிலை! மக்கள் விசனம்

wpengine

கிழக்கு மாகாண சபைக்கு நாளை இறுதி நாள்

wpengine

சட்டவிரோத மண் அகழ்வு! மக்களை பற்றி சிந்திக்காத நல்லாட்சி அரசாங்கம்

wpengine