பிரதான செய்திகள்

சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி ஆராய ஆணைக்குழு பொதுபல சேனா

நாட்டில் சிங்கள பௌத்தர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி ஆராய்தற்கான உண்மையை கண்டறியும்  ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் என பொதுபல சேனா அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையினை முன்வைத்துள்ளது.

 

அதேநேரம் 2002 ஆம் ஆண்டில் புத்தசாசன விவகாரத்திற்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு கோரியுள்ளது.

அவ்வமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அதி.வணக்குத்துக்குரிய மகாநாயக்க தேரர்களை நீங்கள் சந்தித்த போது சிங்கள பௌத்தர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கான உண்மையை கண்டறியும்  ஆணைக்குழுவினை நிறுவதாக கூறியுள்ளீர்கள்.

இந்த விடயம் வரவேற்கத்தக்கது என்பதோடு புத்தசாசன அமைச்சரும் வரவேற்புக்குரியவர். அதனால் சிங்கள் பௌத்தர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தேடி அறிவதற்கான உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை நிறுவதற் அவசியத்தையும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

அதேபோல் 2002 ஆம் ஆண்டு புத்தசாசன விவகாரங்களுக்காக நிறுவப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்தும் நீங்கள் அவதானம் செலுத்த வேண்டும்.

அதேபோல் நாட்டு மக்களிடையே விரிசலையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்ற ஒரு அரசியலமைப்பினால் நல்லிணக்கம் ஒருபோதும் சாத்தியப்படாது.

காரணம் நாட்டின் பெரும்பான்மையினரிடத்தில் நல்லிணக்கம் ஏற்படுத்தபடாத போது அது சகல மக்கள் குழுக்களுக்கு பாதிப்பாக அமைந்துவிடும். அதேபோல் ஞானசார தேரர் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் நீங்கள் விலங்கிக்கொள்ள  இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விவசாயிகளின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த ஆக்கபூர்வமான செயற்பாடுகள் தேவை” – ரிஷாட் எம்.பி

wpengine

அமைச்சு பதவியில் மாற்றம்

wpengine

தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க புதிய அமைச்சர்கள் தேவை! பைஸர் முஸ்தபா

wpengine