பிரதான செய்திகள்

சிங்கள பௌத்தர்களுக்காக ஒர் தேசிய அரசியல் கட்சி உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் தொடர்புடைய அமைப்பாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள மஹாசோன் பலகாய மற்றும் சிங்கள பௌத்த கடும்போக்குவாத அமைப்பான சிங்களே ஆகியன கூட்டாக இணைந்து புதிய அரசியல் கட்சியொன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளன.

தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொள்ளும் நோக்கில் அண்மையில் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டதாக சிங்களே தேசிய அமைப்பின் பிரதம அமைப்பாளர் டென் பிரியசாத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்…

அனைத்து இன சமூகங்களுக்கும் அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. எனினும் பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களுக்கு என தனியான கட்சி கிடையாது.

சோம தேரரையும் பௌத்தர்களையும் பயன்படுத்திக் கொண்ட சில அரசியல்வாதிகள் பணத்திற்காக அங்கும் இங்கும் கட்சி தாவி வருகின்றனர்.

எனவே சிங்கள பௌத்தர்களுக்காக ஒர் தேசிய அரசியல் கட்சி உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அரிசி,தேங்காய் விலை அதிகரிப்பு! சுவரொட்டிகள்

wpengine

தங்கத்தின் விலையில் மீண்டும் வீழ்ச்சி

wpengine

நாகரீகங்களின் தோற்றுவாய்க்கு வித்திட்டவர் இறைதூதர் இப்ராஹிம்” – ஹஜ் பெருநாள் வாழ்த்து செய்தியில் ரிஷாட்!

Editor