(பரீட் இஸ்பான்)
யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்த நாட்டிலே முஸ்லிம்களை பயன்படுத்தி தங்களது ஊடகங்களை பிரபல்யப்படுத்தும் வேலைகளை சிங்கள ஊடகங்கள் முன்னெடுத்து வருகின்றன. பொருளாதாரத்தில் மேலோங்கி இருந்த முஸ்லிம் சமூகத்தை திட்டமிட்டு அழிக்கும் நோக்கில் யுத்தத்திற்கு பிற்பட்ட காலத்தில் பல இனவாதக் குழுக்கள் தோற்றம் பெற்றன. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதியின் தோல்வி கூட இனவாதம் தோற்றுவிக்கபப்பட்டதால்தான். முஸ்லிம்கள் வரலாற்றில் ஒன்றுபட்டு ஆட்சி மாற்றத்துக்கு துணிந்து வாக்களித்தார்கள்.
நவீன மாற்றம் இன்று செய்திகள் சமூக வலைத்தளங்களின் ஊடாக கண் சிமிட்டும் நேரத்தினுள் செய்திகள் பரிமாறும் அளவு தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
இனவாதிகளின் செயற்பாடானது பள்ளிவாயல்களை உடைத்தல், முஸ்லிம்களின் ; வர்த்தக நிலையங்களை தாக்குதல், முஸ்லிம்களின் மீள்குடியேற்த்தை தடுத்தல் என்ற போக்கில் இந்த நாட்டில் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
இன்று பிரபல சிங்கள ஊடகங்கள் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை கேள்விக்குறியாக்கும் இனவாதிகளின் செயற்பாட்டை சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் வில்பத்தை அழிப்பவர்களாகவும,; இயற்கைக்கு எதிரானவர்களாகவும் இலங்கை நாடு சிங்களவர்களுக்கு மாத்திரமே உரித்தானது என்ற வகையிலான இனவாதக் கருத்துக்களை சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிரானவர்களாக திசை திருப்பும் வேலைத்திட்டத்தினை இனவாத சமூக வலைத்தளங்களும், சில சிங்கள ஊடகங்களும் தங்களை பிரபல்யப்படுத்துவதற்காக இவ்வாறான இனவாதப்பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இனவாதிகள் அமைச்சர் றிஷாதை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு விரோதி போன்று காட்டி தங்களை தங்களது இனத்துக்காக போராடும் போராளிகள் போன்று காட்ட பல முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வில்பத்தை றிஷாட் அழித்து விட்டார் என்ற பிரச்சாரமும் இவர்களின் இனவாத சிந்தனையும், ஊடகப்பிரபல்யமுமே இவ்வாறு கடந்த பொதுத்தேர்தலில் பொதுபல சேனா தேர்தலில் போட்டியிட்டு மண் கவ்வியது நாம் அறிந்ததே.
இவற்றை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில சிங்கள ஊடகங்கள் இன்று அமைச்சர் றிஷாட் பதியுதீனை சிங்கள மக்கள் மத்தியில் ஒரு இன விரோதி போன்று காட்டி அப்பாவி சிங்கள மக்களை உசுப்பேற்றி தங்களது ஊடகத்தை பிரபல்யப்படுத்தும் வேலைத்திட்டங்களை கட்ச்சிதமாக செய்து வருகின்றனர்.
அமைச்சர் றிஷாட் செய்கின்ற அனைத்த அபிவிருத்திகளையும், வேலைத்திட்டங்களையும் திரிபுபடுத்தி சிங்கள மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் போன்று ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் அதிகமான பணம் செலவு செய்து சிங்கள மக்களுக்கு இனவாதத்தை உருவாக்கும் வேலைத்திட்டங்களை ஒரு சில ஊடகங்கள் செய்து வருகின்றமை எதிர்கால சுதந்திர இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தத்தை உருவாக்கி விடுவார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
எங்கு எது நடந்தாலும் மக்கள் மத்தியில் செய்திகளை கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களே பிரதான பங்கு வகிக்கின்றது. ஊடகங்கள் நடுநிலைமையாகவும், உண்மையை எடுத்துச் சொல்பவர்களாகவும் ; இந்த நாட்டில் எந்தப்பிரச்சினைகளும் இடம்பெறாது என்பதே நிதர்சனம்.
முஸ்லிம் மக்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் இவ்வாறான ஊடக இனவாதம் இடம்பெறுவதை நீங்கள் அறீவீர்களோ என்பதை நாம் அறியோம். இருப்பினும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு உங்களை வேண்டிக் கொள்வதோடு. முஸ்லிம் அரிசியல் தலைமையகள், புத்தி ஜீவிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பது முஸ்லிம் சமூகத்தின் தார்மீகப் பொறுப்பாகும்.
இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறினால் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான மிகப்பெரிய ஊடக இனவாதக் குழுக்கழுவை உண்டுபண்ணி முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
குறிப்பு: இனவாதிகளின் செயற்பாடு அமைச்சர் றிஷாதுக்கு எதிரானது என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதீர்கள் அமைச்சர் றிஷாட் போராடுவது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி முஸ்லிம்களின் உரிமைக்காகவும், நாட்டில் முஸ்லிம்களின் அபிலாஷைகளுக்காகவும் என்பதை மறந்து விடாதீர்கள்.