[எம்.ஐ.முபாறக்]
இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கிவிடக் கூடாது என்றும் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்றும் ஒரு தரப்பு விரும்புகின்றது.மறுபுறம்,இனவா
தமிழர்களுக்குப் பிரச்சினைகள் எழும்போது-அந்தப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்போது-அவர்களின் காணிகள் விடுவிக்கப்படும்போது இனவாதம் கிளப்பப்படுகின்றது.
முதலமைச்சர் நடந்துகொண்ட விதத்தில் எங்காவது இனவாதம் இருக்கின்றதா?அந்தப் படை அதிகாரி ஒரு சிங்களவர் என்பதாலா முதலமைச்சர் அவ்வாறு நடந்துகொண்டார்?இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வைத்துத்தான் அது இனவாத செயற்பாடா அல்லது இருவருக்கு இடையிலான பிரச்சினையா என்று முடிவெடுக்க முடியும்.
protocol என்பது அரசியல்வாதிகள் மற்றும் இராஜதந்திரிகளை பதவி நிலையை அடிப்படையாக வைத்து-வகைப்படுத்தி அந்தப் பதவி நிலைக்கு ஏற்ப மரியாதை செலுத்துவதாகும்.அந்த protocol அந்த அதிகாரிக்குத் தெரியவில்லை என்றுதான் முதலைமைச்சர் அந்தக் காட்சியில் கூறுகின்றார்.
ஆகவே,முதலமைச்சரின் அந்த வார்த்தைப் பிரயோக்கத்தின் போது எந்தவோர் இடத்திலும் இனவாதக் கருத்துக்களைக் காண முடியவில்லை;மிக மோசமான வார்த்தைப் பிரயோகத்தையும் காண முடியவில்லை.அவர் எல்லோர் முன்னிலையிலும் அந்த அதிகாரியை ஏசினார் என்பதை மாத்திரம்தான் குற்றச்சாட்டாக முன்வைக்க முடியும்.
உண்மை இவ்வாறு இருக்கும்போது,அது இப்போது இனவாதமாக மாற்றப்பட்டுள்ளது.மஹிந்தவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்பட்ட பௌத்த தேரர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கியுள்ளனர்.அவர்களுக்கும் இந்தப் பிரச்சினைக்கும் என்ன தொடர்பு உண்டு?அதுபோக,அவர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் நேரடியாக முஸ்லிம்களையே ஏசுகின்றனர்.
மட்டக்களப்பில் முதலமைச்சருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி மிகவும் மோசமாக முஸ்லிம்களை திட்டித் தீர்த்த காட்சிகள் பதிவாகியுள்ளன.அத்தோடு,சிங்கள ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் இந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாமல் முஸ்லிம்கள் மீது இனவாதத்தைக் கக்குவதைக் காணலாம்.
இவர்கள் எல்லோரிடமும் ஒரு கேள்வி.இலங்கை வரலாற்றில் படையினருக்கும் பொலிசாருக்கும் ஞானசார தேரர் ஏசியது போன்று எவராவது எசியதுண்டா?எலும்புத் துண்டுகளுக்காக அலைகின்ற நாய்கள் என்று பொலிசாரை ஏசியதை மறக்க முடியுமா?.பொலிசார் மீதும் படையினர் மீதும் அப்போது வராத பாசமும் மதிப்பும் இவர்களுக்கு இப்போது எங்கிருந்து வந்தது?சிங்கள இனத்தைச் சார்ந்த ஒருவர் ஏசினால் அது சரி.சிங்கள இனத்தைச் சாராத ஒருவர் செய்தால் அது இனவாதம் என்றா சொல்ல வருகின்றீர்கள்?ஞானசாரவைப் போன்ற மிக மோசமான வார்த்தைகளை முதலமைச்சர் பாவிக்கவுமில்லை;சிங்கள இனத்தைத் தாக்கும்விதத்தில் நடந்துகொள்ளவுமில்லை.