பிரதான செய்திகள்

சிங்களத் தலைவர்கள் தமிழ்- முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்- ஞானசார

சிங்களத் தலைவர்கள் தமிழ்- முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

தனது இனத்தை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து சிங்கள அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் , முஸ்லிம் தலைவர்களிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது.

வடக்கில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் குடியேற்ற வேண்டியது அமைச்சர் டி.எம். சுவாமிநாதனின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மஹிந்த விளங்கிக்கொள்ள வேண்டும்! இனவாதத்தால் அரசியல் செய்ய முடியாது.

wpengine

ஏறாவூர் விகாரைக்கு நஷ்டஈடு வழங்கி வைத்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்

wpengine

ஆகஸ்ட் மாதத்தில் இலங்கையில் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகள்

wpengine