பிரதான செய்திகள்

சிங்கப்பூர் நாட்டின் மஹா கருணா பௌத்த அமைப்பினால் உதவிகள்

(அனா)
சிங்கப்பூர் நாட்டின் மஹா கருணா பௌத்த அமைப்பின்  ஏற்பாட்டில் இலங்கையில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள வரிய மாணவர்களின் கல்வி அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அதன் அடிப்படையில் பொலநறுவை மாவட்டத்தின் வெலிகந்த பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மாணவர்களுக்கும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் கல்குடா கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட முன்நூறு (300) மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் பொதிசெய்யப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை சீறுடைக்கான துணிகள் என்பன வழங்கப்பட்டதுடன் தாய்மார்களுக்கு வீட்டு பாவனைப் பொருட்களும் இன்று (10.06.2017) பாசிக்குடா லாயா வாவேஸ் ஹோட்டலில்  வைத்து கையளிக்கப்பட்டன.

மஹா கருணா பௌத்த அமைப்பின் ஆலோசகர் மரியாதைக்குறிய கலாநிதி கே.குணரத்ன (மு.புரயெசயவாயெ) தேரோ தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் 23வது படைப்பிரிவின் பிரதான கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் ஷந்துசித்த பணண்வல (ளுயவொரளiவாய Pயயெயெயடய) சிங்கப்பூர் நாட்டில் இருந்து வருகை தந்த மஹா கருணா பௌத்த அமைப்பின் பிரதி நிதிகள் 76 பேரும் கலந்து கொண்டனர்.

Related posts

இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் மீண்டும் வேலை நிறுத்தம்

wpengine

ஜுலை 18 ஆம் திகதிவரை நாமல் சிறையில் (விடியோ)

wpengine

வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட சமுர்த்தி பயனாளிகள்! பழைய படி முத்திரை வழங்க வேண்டும்

wpengine