செய்திகள்பிரதான செய்திகள்

சிக்கப்போகும் 3 முன்னாள் அமைச்சர்கள் – ஜனாதிபதி அநுர

வெளியிட்ட தகவல் பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மூன்று முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பேருவளையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி , உத்தியோகபூர்வ இறக்குமதி தடையின் போது இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை தவறாகப் பயன்படுத்தியதில் இந்த நபர்கள் ஈடுபட்டதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.முறையான பதிவு இல்லாமல் வாகனங்களைப் பயன்படுத்தியதற்காக மூன்று முன்னாள் அமைச்சர்களும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஹிலாரி கிளிண்டனுக்கு நிமோனியா காய்ச்சல்! ஆதரவாளர்கள் கவலை

wpengine

முஸ்லிம்களை எவரும் கேவலப்படுத்தாத வகையில் கேவலப்படுத்திய விக்னேஸ்வரன் -அன்வர் கண்டனம்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor