பிரதான செய்திகள்

சிகிரியா குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 4 கோடி நிதி உதவியை வழங்கிய யுனெஸ்கோ!

சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.

இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அதனூடாக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும் படிக்கட்டுகள் விரைவில் புனரமைக்கப்படும் என மத்திய கலாசார நிதியம் குறிப்பிடுகின்றது.

இதேவேளை, சிகிரியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் விசேட திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுற்றுலாப் பயணிகள் பயன்படுத்தும் முச்சக்கர வண்டிகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுவதற்கும் கட்டண முறைமையை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

திருகோணமலையில் 2 ஆசனம் சஜித் அணிக்கு கிடைக்குமா?

wpengine

மு.கா.வின் வட்டார பிரிப்பு தரமிக்கதாக இருக்குமா?

wpengine

லங்கா சதொச அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைத்தது!

Editor