பிரதான செய்திகள்

சிகிச்சை பலனின்றி ஒட்டமாவாடி இளைஞன் விபத்தில் மரணம்

(அனா)

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த ஓட்டமாவடி இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக மரணமடைந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டி சாரதி வெளியே வீசப்பட்டு கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த பஸ்ஸில் மோதுண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்விபத்தில் மரணமடைந்தவர் ஓட்டமாவடி 3ம் வட்டாரத்தைச் சேர்ந்த சுலைமா லெப்பை ஜனூஸ் (வயது 27) என்பவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்த இளைஞரும், பஸ்ஸின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணமடைந்தவரின் ஜனாஸா வெள்ளிக்கிழமை இரவு வைத்திய பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளின் பின்னர் நாளை சனிக்கிழமை ஓட்டமாவடி முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாயில் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென உறவினர்கள் தெரிவித்தனர்.

Related posts

தொலைபேசிகளைத் திருடிய இராணுவ வீரர்கள் இருவர் கைது!

Editor

நாடளாவியரீதியிலான விசேட சுற்றிவளைப்பில் 241 பேர் கைது.. !

Maash

மாகாண சபை உறுப்பினர் அஸ்மீன் கூறுவது பொய் – மௌலவி சுபியான்

wpengine