உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சிகரெட் வெடித்து ஒருவர் உடல் கருகி பலி

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பர்க் நகரை சேர்ந்தவர் டால்மேட்ச் எலியா (38). இவருக்கு சிகரெட் பழக்கம் இருந்தது. 

நேற்று முன்தினம் இரவு இவர் தனது படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடல் 80 சதவீதம் கருகிய நிலையில் இருந்தது.

படுக்கை அறையில் உடல் கருகி இறந்தது எப்படி, என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்தது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் இ-சிகரெட் பிடிக்க பயன்படுத்தப்படும் குழாயின் கூரியபகுதி அவரது மண்டை ஓட்டுக்குள் பாய்ந்து இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

எனவே, அவர் இ-சிகரெட் புகைக்கும் போது அந்த குழாய் வெடித்து சிதறியதில் படுக்கை அறையில் தீப்பிடித்து அவர் உயிரிழந்து இருப்பதாக டொக்டர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் 2009 முதல் 2016 ஆம் ஆண்டுவரை 195 இ-சிகரெட் வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அதில் 133 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆனால் உயிரிழந்த சம்பவம் தற்போது தான் முதன் முறையாக நடந்துள்ளது.

Related posts

வெறுமனே என்னால் வேடிக்கை பார்க்க முடியாது என   நிமல் லான்சா ஜனாதிபதிக்கு கடிதம்

wpengine

நானாட்டான் பாடசாலை கொரானா நீக்கும் நடவடிக்கை

wpengine

நிதி நெருக்கடிகளை போக்க நிதியமைச்சர் பல்வேறு நடவடிக்கை

wpengine