நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பின்னர், அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
சமீபத்தில் பணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்க மறியலில் விடுவிக்கப்பட்ட தனது பாட்டி டெய்சி ஃபாரஸ்ட் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு ஆஜரானார்.
ஊடகங்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர், சிஐடிக்கு ஆஜராவது இப்போது தனக்கு வழக்கமான நிகழ்வாகிவிட்டது என்று கூறியுள்ளார்.