(அஷ்ரப் .ஏ.சமத்)
கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் வருடாந்த பரிசளிப்பு கல்லுாாியின் அதிபா் சட்டத்தரணி றிஸ்வி மரிக்காா் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கலந்து சிறப்பித்தாா். இந் நிகழ்வில் கல்வியமைச்சா் அகிலவிராஜ் காரியவாசம், இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி மற்றும் அதிதிகளும் கலந்து சிறப்பித்தனா்.
இங்கு உரையாற்றிய பிரதம மந்திரி – தேசிய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள இறுதிச் சம்பவம் தேசிய நல்லணக்கத்தில் நாம் அணைவரும் இலங்கையா் என்ற உணா்வில் நாம் எல்லோறும் சோ்ந்து தீா்வு காணல் வேண்டும் எமது நாட்டு முன்னேற்ற இருநத் காலத்தில் மலேசியா சிங்கப்புர் , இந்தியா சீன போன்ற நாடுகள் எமது நாட்டுக்கு பின்னால் இருந்தன தற்பொழுது எமது நாட்டை விட இந் நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளன.
இந்தியாவில் முன்னளா் பிரதமா நேறு அவா்கள் எடுத்த முயற்சியினால் அவா்கள் எல்லோரும் இந்தியன் உணா்வுடன் உள்ளாா்கள் ஆனால் சுநத்திரம் அடைந்து அவா்கள் மொழி இன ரீதியில் பிரிந்திருந்தனா். நாம் மொழி ரீதியாகவும் மத ரீதியாகவும் அரசியல் வாதிகள் பாடசாலையும் மாற்றியுள்ளா்ாக்ள. சிறிலங்கா மாத்தா என்ற வசனத்திற்கு ஏற்ப நாம் அனைவரும் ஒரு தாய் பெற்ற மக்கள் என்ற ரீதியில் வாழ வழிவகுப்போம். என பிரதமா் தெரிவித்தனா்.