Breaking
Sun. Nov 24th, 2024

(ஏ.எச்.எம்.பூமுதீன்)

2012ம் ஆண்டு ஜூன் மாதம் 19ம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் முஸ்லிம் எம்பிக்களுக்கும் – அமைச்சர் பசில் ராஜபக்சவுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.

முஸ்லிம் எம்பிக்களின் மாவட்ட தொகுதிப் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றிற்கு தீர்வு வழங்கும் அடிப்படையில் தான் இச்சந்திப்பு இடம்பெற்றது.

முஸ்லிம் எம்பிக்கள் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்த போது அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் தொகுதிக்கு பொறுப்பான எம்பியான தற்போதைய சுகாதார பிரதியமைச்சரான iபாசல் காசீம், தமது பொத்துவில் சுற்றுலா பிரச்சினை குறித்து விபரிக்கத் தொடங்கினார்.

அப்போது முகா எம்பி பைசால் காசீம், அமைச்சர் பசிலை நோக்கி ‘ சேர் பொத்துவிலில்; உள்ள சுற்றுலா விடுதிகள் பிரச்சினையொன்றை எதிர்நோக்குகின்றன. மதுபானச் சாலைகள் உல்லையில் இருக்கின்றன. அங்கிருந்து பியர் போத்தல்களை வாங்கி வரும் உல்லாசப் பயணிகள் அறுகம்பை பகுதியில் உள்ள சுற்றுலா விடுதிகளுக்கு அருகில் வைத்து அதனை அருந்திவிட்டு அவ்விடத்திலேயே வெற்று போத்தல்களை போட்டு விட்டு செல்கின்றனர்.

பின்னர் அங்கு வரும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் அங்குள்ள விடுதிகளே மதுபானம் விற்பனை செய்கின்றன எனத் தவறாக கருதி அதிக தண்டப்பணங்களை விதிக்கின்றனர். முஸ்லிம் சமுகத்தின் உரிமையாளர்களும் இதனால் வெகுவாக பாதிப்படைகின்றனர்.

முஸ்லிம்களுக்கு ஹராமாக்கப்பட்ட ஒருவிடயம் மதுபானம் ஆனால் செய்யாத குற்றத்திற்காக அவர்களுக்கும் ஏனையோர்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகின்றது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்துங்கள். அல்லது மதுபானம் விற்பனை செய்ய எமக்கும் அனுமதி வழங்குங்கள்’ என்று கூறினார்.

இவர் இவ்வாறு கூறிய போது ஏனைய முஸ்லிம் எம்பிக்கள் ஆத்திரமடைந்தனர். அவருக்கு அருகிலிருந்த ஹூனைஸ் எம்பி, ஹரீஸ் எம்பி, பிரதியமைச்சர் பஷீர் ஆகியோர் அவரின் கால்களை கிள்ளி பேசவேண்டாமென தடுத்தனர். ஆனால் அதையும் மீறி பைசால் எம்பி அனுமதி தருமாறு வேண்டியே நின்றார்.

உடனே குறிக்கிட்ட அமைச்சர் பசில் உங்களுக்கு ஒரு மதுபான சாலை அனுமதிப்பத்திரமொன்றை தருகின்றேன். அதன் பின் முஸ்லிம் சமுகம் உங்களை எவ்வாறு நடத்தும் என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என பசில் கூறிய போது ஏனைய எம்பிக்கள் கவலை அடைந்தனர். இது தான் நடந்தது.

இந்தக் கூட்டத்தில் முகா தலைவர் ஹக்கீம் கலந்து கொள்ளவில்லை. அப்போது அவர் நைஜீரியாவில் இருந்தார். அவர் நாடு திரும்பியதும் பைசால் காசிமின் இந்த விவகாரம் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர் பசில் மூலமாக இதனை அறிந்து கொண்ட ஹக்கீம் உடன் பைசால் எம்பியை அழைத்து விலாசித் தள்ளினார். இது இவ்வாறிருக்க…

பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் அங்கிருந்த முஸ்லிம் எம்பி ஒருவரே சுடரொளிக்கு அப்போது வழங்கியிருந்தார்.

சுடரொளி ஞாயிறு பத்திரிகையில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த நெசமாத்தான் சொல்கிறேன் என்ற அரசியல் அந்தரங்கப்பகுதியில் இந்த விவகாரம் ஜூலை முதலாம் திகதி வெளிவந்தது.

இது வெளிவருவதற்கு முன்பாக இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள ஏனைய முஸ்லிம் எம்பிக்களை தொடர்பு கொண்டு சம்பவம் தொடர்பில் கேட்ட போது எம்பிக்களில் பலர் ஆம் என ஒத்துக் கொண்டனர்.

அதே வேளை அமைச்சர் ரிசாத் எக்காரணம் கொண்டும் இச்செய்தியினை பிரசுரிக்க வேண்டாம் என்றும் அவர் என்ன நோக்கத்திற்காக சுட்டிக்காட்டினார் என்ற அறியாத ஒருவர் தான் இந்த தகவலை உங்களுக்கு தந்துள்ளார் என்று பைசால் எம்பியை அப்போது காப்பாற்ற முனைந்தார்.

‘ பைசால் எம்பி பாவம் தயவு செய்து அச்செய்தியை பிரசுரிக்க வேண்டாம்’ என கூறினார். மாற்றுக்கட்சியைச் சேர்ந்த எம்பியாக இருந்த போதிலும் கூட பைசால் காசீமை காப்பாற்றுவதில் அமைச்சர் ரிசாத் பெரும் தன்மையுடன் நடந்து கொண்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *