பிரதான செய்திகள்

சாரதியை நடுவீதியில் தாக்கிய பொலிஸ் அதிகாரி பணி நீக்கம்!

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர், நடுவீதியில் பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு, அவரின் மேல் ஏறி குதித்து மிதிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய போக்குவரத்து பொலிஸ் அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சீருடை அணிந்த போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி ஒருவரே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளமை புலப்படுகிறது. மஹரகமை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர், சாரதியொருவர் மீதே இவ்வாறு இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் மஹரகம ஹைலெவல் வீதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

டிப்பர் சாரதி ஒருவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறித்த சாரதி செலுத்திய டிப்பர் மஹரகம பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொறுப்பதிகாரி மைத்திரிபாலவின் மீது மோதி விபத்துக்குள்ளாக்கியுள்ளது. விபத்தில் காயமடைந்த பொறுப்பதிகாரி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன்பின்னரே மேற்படி பொலிஸ்  அதிகாரி சாரதியை தாக்கியுள்ளார். குறித்த சாரதியின் பக்கம் தவறு இருக்கக்கூடும். எனினும் இவ்வாறான தாக்குதல்களை பொலிஸ் ஒருபோதும் அனுமதிப்பதில்லை. இது தொடர்பில் விசேட விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மண்ணெண்ணெய் கொள்வனவுக்கான உயிரை விட்ட மொஹமட் இலியாஸ்

wpengine

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எங்களுக்கு நிரந்தர உறவு என்பது ஒருபோதும் இருந்தது கிடையாது

wpengine

வாக்கு வாதத்தால் சபையில் நேற்று சிரிப்பும் சலசலப்பும்

wpengine