பிரதான செய்திகள்

சாய்ந்தமருது விடயத்தில் அமைச்சர் றிஷாத் குற்றவாளியே!

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்)

சாய்ந்தமருதை சேர்ந்தவர்கள் தங்களது தனி உள்ளூராட்சி மன்ற விடயத்தில் அமைச்சர் றிஷாத்தின் கொடும்பாவியை எரித்திருந்தனர். இவர்கள் அவர் வாக்குறுதியளித்த போதிலும் அதனை பெற்றுக் கொடுக்கத் தவறியதையே பிரதானமாக சுட்டிக்காட்டி இருந்தனர்.

அமைச்சர் றிஷாத் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சாய்ந்தமருதில் தனி உள்ளூராட்சி மன்ற விடயத்தை தனது பிரதான கோரிக்கையாக முன் வைத்தார். அமைச்சர் ஹக்கீமும் முன்வைத்தார். எல்லோரும் அமைச்சர் ஹக்கீமின் பின்னால் சென்று வாக்களித்தனர். இதன் மறுபொருள் ” அமைச்சர் ஹக்கீம் தனி உள்ளூராட்சி மன்ற விடயத்தை பார்த்துக்கொள்வார். நீங்கள் உங்களுடைய வேலையை பார்த்துக்கொள்ளுங்கள் ” என்பதாகும்.

இதன் பிறகும் அமைச்சர் றிஷாத் அங்கு சென்று அவர்களது தேவைகளை நிறைவு செய்ய முயன்றமையாலேயே அவரை குற்றவாளி என்கிறேன்.

“ஒரு வீட்டின் உரிமையாளர் தனது வீட்டுக் காவலுக்கு ஒரு நாயை கட்டிப்போடுகிறார். அந்த நாய் கள்ளனின் பிஸ்கட்டிற்கு அடிமையாகி இருந்தது. இவ்விடயம் வீட்டின் உரிமையாளனுக்கும் தெரியும். தெரிந்தும் அதனையே தொடர்ந்தும் காவலுக்கு வைக்கின்றார். கள்ளன் வந்தான். பிஸ்கட்டை வீசினான். இதனை பார்த்த பக்கத்து வீட்டு நாய் குரைத்தது. அந்த வீட்டின் நாயோ கள்ளனை விட்டுவிட்டு பக்கத்து வீட்டு நாயை விரசியது. பக்கத்து வீட்டு நாய் ஒரு தூரத்தில் நின்று குரைத்தது. இருந்தாலும் யாருக்கும் விளங்கவில்லை. கள்ளன் களவெடுத்துச் சென்றான். இதனை அறிந்த வீட்டின் உரிமையாளன் பக்கத்து வீட்டு நாயை, தனக்கு கேட்குமாறு குரைக்கத்தெரியாதா என அடித்தானாம்.”

இத போன்று தான் சாய்ந்தமருது மக்களின் செயற்பாடும். அவர்களது கோரிக்கையை முன்னிறுத்தி வாக்கு கேட்டால், வாக்களிக்க மாட்டார்கள். ஆனால், அவர்களின் கோரிக்கையை அவர்கள் நிராகரித்தவர் நிறைவேற்றி கொடுக்க வேண்டும். தூரத்தில் நின்று குரைத்த பக்கத்து வீட்டின் நாயின் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர் எழும்பாது போனாலும் அது குறித்து அந் நாயை குற்றம் சுமத்த முடியாது.

வாக்களிக்காது நிராகரித்தவர்கள், எங்களுக்கு அதை செய்து தாருங்கள், இதை செய்து தாருங்கள் என கேட்க வெட்கப்பட வேண்டும். அவர்களுக்கு அதற்கு உரிமை இல்லை.

தாங்கள் அதிகாரங்கள் வழங்கிய ஒருவர், தன்னிடம் அதிகாரம் தாருங்கள், இதனை செய்து தருகிறேன் என கூறிய ஒருவர் அதனை செய்து தரவில்லை என்றால் தான் அவரை அச் சமூகம் எதிர்க்க வேண்டும். அமைச்சர் றிஷாதை சாய்ந்தமருது மக்கள் எதிர்ப்பது எந்தவிதத்திலும் நியாயமல்ல.

அப்படியானால் ஏன் அவர் உறுதிமொழி வழங்கினார் என்ற வினா எழலாம். பக்கத்து வீட்டு நாய் குரைத்தது. கள்ளனை விரட்ட குரைத்த அந்த பக்கத்து வீட்டு நாயை யாரும் பிழை என கூற முடியுமா. அவரது உறுதிமொழியை நிறைவேற்றினால் கண்டு கொள்ள வேண்டும். நிறைவேற்றாவிட்டாலும் கோபிக்க முடியாது. அந்த அதிகாரம் சாய்ந்தமருது மக்களுக்கு இல்லை.

Related posts

அமைச்சர் றிஷாதின் பாராளுமன்ற குரல் கொடுப்புக்களும் அரசுக்கு எதிரான பேச்சுக்களும் சாதாரணமானவையா?

wpengine

விக்னேஸ்வரன் உரை! வெளியேறிய வடமாகாண சபை உறுப்பினர்கள் (வீடியோ)

wpengine

அமெரிக்காவை மீண்டும் மிரட்டுகிறது வட கொரியா; நீர் மூழ்கி அணு ஏவுகணை வெற்றிகரமாக பரிட்சிப்பு

wpengine