பிரதான செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச சபை! பேரினவாதிகளின் அழுத்தம்

பேரினவாதிகளின் அழுத்தம் காரணமாகவே சாய்ந்தமருது பிரதேச சபை நகர சபையாக மாற்றப்பட்டு பின்னர் அது பிரதேச சபை என்ற நிலைக்கே தள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் அரசாங்கம் சிறுபான்மை மக்களை மாற்றான் தாய் கைப் பிள்ளையாக பார்ப்பது தெளிவாவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பண்டாரவளை பூனாகலை பகுதியில் இன்று (26) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும் இன்று காற்றில் பறந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும் எதிர்க் கட்சிகள் எதிர்பார்ப்பதை போன்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவும், சஜித் பிரேமதாசவும் அன்னம் சின்னத்தில் போட்டியிட்டுவது உறுதி என தெரிவித்த அவர் அதனூடாக ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற அதிகாரத்தை கைபற்றும் எனவும் தெரிவித்தார்.

Related posts

இன்றைய ஆட்சியில் சமூகவலைத்தளம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத ஆட்சியாளர்கள் நாமல்

wpengine

காத்தான்குடி பிரதேச கோட்ட மட்ட விளையாட்டு விழாவில்- மத்திய கல்லூரி தேசிய பாடசாலை சம்பியன்

wpengine

முன்னாள் MP ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிடியாணை!

Editor