பிரதான செய்திகள்

சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரியில் 09 மாணவிகள் பரீட்சையில் சித்தி

(அஸ்லம் எஸ்.மௌலானா)
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட அல்ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சையில் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியின் ஒன்பது மாணவிகள், அனைத்து பாடங்களிலும் சித்தி பெற்று அல்-ஆலிம் பட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அல்ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சை முடிவுகள் நேற்று இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.

இதன் பிரகாரம் சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் இருந்து இவ்வருடம் முதன்முறையாக அல்ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சைக்கு பத்து மாணவிகள் தோற்றியிருந்தனர். இவர்களுள் ஒன்பது மாணவிகள் ஆறு பாடங்களிலும் சித்தி பெற்றிருப்பதுடன் மற்றொரு மாணவி ஐந்து பாடங்களில் சித்தியடைந்துள்ளார் என கல்லூரி அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி தெரிவித்தார்.

இக்கல்லூரியின் ஐந்து வருட அல்-ஆலிம் கற்கை நெறியை சிறப்பாக பூர்த்தி செய்து, தென்கிழக்கு பல்கலைக்கழக நிபுணத்துவ குழுவினால் கல்லூரி மட்டத்தில் நடத்தப்பட்ட உள்ளக பரீட்சை மூலம் தெரிவான மாணவிகளே இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அல்ஆலிம் முதவஸ்ஸிதா பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கல்லூரியினால் ‘அத்தைபிய்யா மௌலவியா’ எனும் பட்டம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர்களுள் சில மாணவிகள் ஜீ.சி.ஈ. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்ததுடன் அவர்கள், தற்போது மௌலவியா பட்டத்துடன் தென்கிழக்கு பலகைக்கழகத்தில் உயர்கல்விக் கற்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2012ஆம் ஆண்டு தனியார் கட்டிடமொன்றில் ஆரம்பிக்கப்பட்ட சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரியில் ஜீ.சி.ஈ.உயர்தர வகுப்புகளுடன் இணைந்ததாக மௌலவியா பட்டத்திற்கான சன்மார்க்கக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் இங்கிருந்து உயர்தர பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவிகள் அனைவரும் சித்தியடைவதுடன் அவர்களுள் பெரும்பாலானோர் பல்கலைக்கழக அனுமதியையும் பெற்றுக்கொள்கின்றனர்.

எமது கல்லூரி மாணவிகளின் அடைவு மட்டம் மிகவும் சிறப்பாக அமைந்திருப்பது குறித்து தாம் பெரும் மகிழ்ச்சியடைவதாகவுமம் இக்கல்லூரிக்கென தற்போது சாய்ந்தமருது பொலிவேரியன் புதிய நகரத்தில் கட்டிடக் தொகுதியொன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் அதிபர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மேலும் குறிப்பிட்டார்.

Related posts

மியன்மார் முஸ்லிம்களுக்காக புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

wpengine

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு வந்த நிதிகளை திருப்பி அனுப்பிய விக்னேஸ்வரன்! வடக்கு முஸ்லிம்கள் விடயத்தில் வாய்மூடி மௌனம்

wpengine

“நீர்ப்பாசன செழுமை” வேலைத்திட்டம் திறந்து வைத்த மன்னார் அரசாங்க அதிபர்.

wpengine