Breaking
Mon. Nov 25th, 2024

(வை எல் எஸ் ஹமீட்)

கல்முனை உள்ளூராட்சி சபையின் தலைவரைத் தெரிவு செய்ய மறைந்த தலைவர் அறிமுகப்படுத்திய முறை
புதிய உள்ளூராட்சி சபைகள் 1987 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டாலும் நாம் முதலாவது உள்ளூராட்சி சபைத் கிழக்கில் 1994ம் ஆண்டுதான் முகம்கொடுத்தோம். அம்பாறையில் அன்றிருந்த 6 முஸ்லிம் பெரும்பான்மைப் பிரதேச சபைகளுக்கு தவிசாளர் தெரிவு செய்வதில் தலைவர் இரண்டு நடைமுறைகளைக் கடைப்பிடித்தார். அதாவது, கல்முனைக்கும் அட்டாளைச்சேனைக்கும் விருப்பத்தெரிவு வாக்குகளின் அடிப்படையில் தவிசாளர் தெரிவுசெய்யப்பட ஏனையவற்றிற்கு முன்கூட்டியே தவிசாளரைத் தலைவர் தீர்மானித்தார். காரணம் முதல் இரண்டும் பல ஊர்களைக் கொண்டவை. ஏனைய நான்கும் கிட்டத்தட்ட தனி ஊர்களைக் கொண்டது.

( சம்மாந்துறை மற்றும் நித்தவூர் ஒரு சில சிறிய கிராமங்களை உள்ளடக்கிய போதும் கூட)

கல்முனைக்கு, மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் I A ஹமீட் அவர்களும் அட்டாளைச்சேனைக்கு ஒலுவிலைச் சேர்ந்த மர்ஹூம் நூஹு லெப்பை அவர்களும் தெரிவு செய்யப்பட்டார்கள். சகல ஊர்களும் அதனை ஏற்றுக் கொண்டார்கள். இதன் மூலம் ஊர்ப்போட்டிகள் தவிர்க்கப்பட்டன.

இடையில் ஒராண்டு கல்முனைப் பிரதேச சபைக்கு கல்முனைக்குடியைச் சேர்ந்த பள்ளிக்காக்கா தவிசாளராக நியமிக்கப்பட்டார். அது ஒரு விசேட சூழ்நிலையாக இருந்தபோதிலும் தவிசாளரும் பிரதித் தவிசாளரும் கல்முனைக்குடியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். சாய்ந்தருது மக்கள் அதனையும் சந்தோசமாக ஏற்றுக் கொண்டனர்.

அதன்பின் கல்முனை மாநகர சபைக்குத்தான் அடுத்த தேர்தல் நடைபெற்றது. இடையில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவில்லை. மு கா போட்டியிடுவதில் சில சட்டப்பிரச்சினைகள் ஏற்பட்டு டம்மி லிஸ்ட் போடப்பட்டது, எல்லோருக்கும் தெரியும். இதில் சகோதரர் ஹரீஸிற்காக இலக்கம் குறிக்கப்பட்ட சகோதரர் முதலாவதாகத் தெரிவு செய்யப்பட்டார். அவருக்கே மேயர் பதவி வழங்கப்பட்டது. அதன்பின் சகோ ஹரீஸ் மேயராக நியமிக்கப்பட்டார். அதன்பின் மர்ஹூம் மஷூர் மௌலானா நியமிக்கப்பட்டார். இந்த எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாய்ந்தமருது மக்கள் மேயர் பதவி கோரவில்லை.

தலைவர் ஏற்படுத்திய சம்பிரதாயப்படி முதலாவது வந்தவர்கள் யாராக இருந்தாலும் எந்த ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டார்கள்.

மேயர் பதவி பிரச்சினை ஆரம்பம்
——————————
இறுதியாக நடைபெற்ற மாநகர சபைத்தேர்தலில் மேயர் நியமனம் தொடர்பாக தேர்தலுக்கு முன் கட்சி ( மு கா) எந்தவித அறிவிப்பையும் செய்யவில்லை. எனவே அதன் பொருள் தலைவர் அன்று ஏற்படுத்திய தொடர் சம்பிரதாயத்தைப் பின்பற்றுவதாகும். மட்டுமல்லாமல் அக்கட்சியின் தவிசாளர் தேர்தலின்போது சாய்ந்தமருதில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் விருப்பத்தெரிவு வாக்கின் பிரகாரமே மேயர் நியமிக்கப்படுவார்; என்று பகிரங்க அறிவிப்புச் செய்து சம்பிரதாயத்தை உறுதிப்படுத்தினார். இந்த அறிவிப்பும் கட்சியினால் மறுதலிக்கப்பட வில்லை.

இந்நிலையில் சாய்நமருது மக்கள் தமது ஊருக்கு மேயரைப்பெற வேண்டுமென்று ஒன்றுபட்டு வாக்களித்தார்கள். அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு மேயர்பதவி வழங்குவதில் ஏன் பிரச்சினை உருவாகியது? அதற்கு காரணம் யார்? ஏன் சாய்ந்தமருது மக்களுக்கு தாம் ஒரு மேயரைக் கொண்டிருக்கின்ற உரிமை இல்லையா? வாக்களிப்பதற்கு சாய்ந்தமருது மக்கள் வேண்டும்; ஆனால் மேயர் பதவிக்கு அவர்கள் தகுதி இல்லையா? ஏன் ஓரப்பட்ச நீதி அவர்களுக்கு காட்டப்பட்டது. கட்சிக்கு மாற்று முடிவு இருந்திருந்தால் ஏன் அது தேர்தலுக்குமுன் பகிரங்கமாக அறிவிப்புச் செய்யப்படவில்லை.

எனவே, சாய்நதமருது மக்களின் மனங்களில் நியாயமான தாக்கம் ஏற்படுவதை யாராலும் மறுக்க முடியுமா?

( தொடரும்)

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *