பிரதான செய்திகள்

சாய்ந்தமருது உள்ளூராட்சி விடயம் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் உறுதி மொழி வழங்கியுள்ளேன்; நிச்சயம் நிறைவேற்றுவேன்!

சாய்ந்தமருது உள்ளூராட்சி விடயம் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம்  உறுதி மொழி வழங்கியுள்ளேன்; நிச்சயம் நிறைவேற்றுவேன்! சாய்ந்தமருது தனியான உள்ளுராட்சி மன்றம் விரைவில் அமையப்பெறும் என உள்ளூராட்ச்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். 

அமைச்சர்களை பொதுமக்கள் சந்திக்கும் தினமாகிய இன்று புதன்கிழமை சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தரப்பினருக்கும் அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்க்கும் இடையில் இடம்பெற்ற சுயாதீனமான சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்ப்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா மேலும் தெரிவிக்கையில்

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரை சந்தித்து இவ் உறுதி மொழியினை ஏற்கனவே வழங்கி இருக்கிறேன். உங்களது ஊரின் சகல ஆவணங்களையும் எம்மிடம் தந்துள்ளார்.  நீங்களும் அவ்வூர் சார்பாக வந்துள்ளீர்கள் இதனை நிறைவேற்றுவேன். அதேபோன்று அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் உங்களது ஊருக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் வர உள்ளேன். இது தொடர்பில்  முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் என்னை ஒரு தடவை சந்தித்துள்ளார் என்றும் தெரிவித்தார்.unnamed (2)

மூன்று நிமிட நேர குறுகிய இச்சந்திப்பின்போது பள்ளிவாசல் சார்பாக அதன் செயலாளர் அப்துல் மஜீத் உலமா சபை தலைவர் காசிம் மௌலவி சாய்ந்தமருது வர்த்தக சங்க தலைவர் உஷாம் சலீம் உட்பட 20 இற்கும்   மேற்பட்டோர் பலரும் கலந்துகொண்டனர்.unnamed (3)

Related posts

தூக்கில் தொங்கிய 20வயது யுவதி

wpengine

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்

wpengine

ரணிலின் குடும்பப் பிடியால் ஐ.தே.க வுக்குள் அபாய ஒலி..!

wpengine