பிரதான செய்திகள்

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை! அமைச்சர் றிஷாட் நேர்மையாக செயற்படுகின்றார் ஹரீஸ் தெரிவிப்பு

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)
சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் திரிகரணசுக்தியுடன் செயற்பட்டுள்ளார் என்பதனையும் அவரது நேர்மையான செயற்பாடுகளையும் பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் நேற்றிரவு (29) ஆற்றிய உரையின் மூலம் தெட்டத் தெளிவாக தெரிவித்து விட்டார்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்க வேண்டும் என்ற விடயத்தில் அமைச்சர் ரிஷாத் விடாப்பிடியாக இருந்த போதும், கல்முனையை நான்கு பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். சாய்ந்தமருதுவை மட்டும் பிரிக்க விடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் தெரிவித்ததன் மூலம் அமைச்சர் ரிஷாத் அவர்களை இன்று இந்தப் பிரச்சினையிலிருந்து நிரபராதியாக்கியுள்ள ஹாரீஸ் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.

சாய்ந்தமருதுக்கு தனியா பிரதேச சபை விவகாரத்தில் அமைச்சர் ரிஷாத்தும் இரட்டை வேடம் போடுகிறார். பொய் சொல்கிறார் என்றெல்லாம் நான் உட்பட பலர் அவர் மீது அதிருப்தியான விமர்சனங்களை முன்வைத்து கருத்துகளை வெளியிட்டிருந்த நிலையில், அமைச்சர் ரிஷாத் அப்படிப்பட்டவர் அல்ல என்பதனை மக்களுக்கு பகிரங்கமாக விளக்கிய ஹரீஸ் அவர்களின் துணிச்சல் பாராட்டுக்குரியது.

அதேவேளை, எமக்காக தனியான பிரதேச சபை ஒன்றை உருவாக்குவதில் பல எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுத்து முன்னின்று செயற்படும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். நீங்கள் இன்று எங்களில் ஒருவனாகி விட்டீர்கள். நன்றிகள் அமைச்சரே!

இந்த விடயத்தில் உங்கள் மீது கொண்டிருந்த சந்தேகங்களை என் போன்ற ஆயிரக் கணக்கானோர் இன்று களைந்து கொண்டுள்ளோம்.

 

Related posts

கொரோனா மன்னாரில் பூரண ஒத்துழைப்பு

wpengine

வவுனியாவில் அபாய ஒலி! பயணிகள் அச்சம்

wpengine

இடைக்கால வரவு செலவு அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில்

wpengine