பிரதான செய்திகள்

சாதாரண மனிதர்களை போன்று நானும் மேடையில் இருக்க விரும்பவில்லை -ஹசன் அலி

தன்னிடம் இருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை தேசிய மாநாட்டுக்கு முன்னர் வழங்குவதாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் அமைச்சர் ஹக்கீம் மீண்டும் வழங்குவதாக கூறியபோதும் அதை அவர் நிறைவேற்றவில்லை என முஸ்லிம் காங்கிரஸ்
செயளாலர் ஹசன் அலி அவர்கள் வன்னி நியூஸ் செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

நேற்றைய 19வது தேசிய மாநாட்டில் கலந்துகொள்ளாதது பற்றி அவரிடம் வினவிய போது இதனை அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்…

கடந்த பேராளர் மாநாட்டில் உயர்பீட செயளாலர் என்ற புதிய பதவி வழங்கப்பட்டு தனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் தலைவருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் தலைவர் ஹக்கீம்
இனக்கபாட்டுக்கு வந்து பறிக்கப்பட்ட அதிகாரங்களை மீண்டும் தேசிய மாநாட்டுக்கு
முன்னர் பெற்றுத்தருவதாக உறுதியளித்ததாகவும், வாக்குறுதி நிறைவேற்றப்படாதாலேயே தான் மாநாட்டுக்கு செல்லவில்லை என அவர் குறிப்பிட்டார்.

அதிகாரம் இல்லாத ஒருவராக கட்சி விழாவுக்கு பெயரளவில் செயளாலராக செல்லவேண்டிய தேவை தனக்கு இல்லை. என குறிப்பிட்ட அவர் கட்சியில் இருந்த அதிகாரங்கள்
பாறிக்கப்படும் அளவுக்கு தான் கட்சிக்கு முரணாக செயற்படவில்லை என குறிப்பிட்டார்.

உங்களை கட்சியில் இருந்து நீக்குவதாக தகவல்கள வெளியாகியுள்ளனவே என அவரிடம் கேட்ட போது…

கட்சியை விட்டு நீக்க தலைவருக்கு அதிகாரம் இல்லை இடைநிறுத்தம் செய்து விசாரனை செய்ய முடியும் எனவும் வரும் எதையும் முகம்கொடுக்க நான் தயாராக உள்ளேன் என அவர் பதிலளித்தார்.

எதிர்வரும் காலங்களில் பறிக்கப்பட அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் என்ன தீர்மானம் எடுப்பீர்கள் என வினவிய போது ..

முஸ்லிம் காங்கிரஸ் பல தியாகங்களுக்கு மத்தியில் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுடன் இணைந்து நாங்கள் உருவாக்கிய கட்சி இந்த கட்சியின் வளர்ச்சியில் பாறிய பங்கு எனக்கு உண்டு நான் ஒரு அடி மரம் நடுவில் வந்து கட்சியில் சேர்ந்தவன்

உங்களுடைய அதிகாரம் குறைய அம்பாரை மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளின் அளுத்தங்கள் காரணமா? என்று கேட்ட போது…

அப்படி எதும் இல்லை அம்பாரை மாவட்டம் கடந்த 16 வருடமாக அமைச்சரை அந்தஷ்துல்ல மாவட்டமாக இருந்து வருகின்றது,குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காக போராடிய அம்பாரை மாவட்ட அரசியல்வாதிகள் உயர் பதவியில் இருக்க வேண்டும் என்று மிகவும் கவலை உடன் தெரிவித்தார்.

Related posts

பிரபாகரன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை காணவிரும்ப வில்லை -கோத்தா

wpengine

10ஆம் திகதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை

wpengine

இஸ்மாயில்புரம் வீட்டுத் திட்டத்தில் உள்ள தைக்கா பள்ளிவாசல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்.

wpengine