கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் கணிதப்பாடத்தில் சித்தியடைவது கட்டயமடாக்கப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் வரவுசெலவுத்திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த காலக்கட்டத்தை பொறுத்தவரையில் எந்தவொரு தொழிலை எடுத்துக்கொண்டாலும் அடிப்படை கணித அறிவு அவசியமாகிறது.
அதனால் கணிதப்பாடத்தில் சித்தியடையாமல் உயர்தரம் கற்பதற்கான திட்டத்தினை அரசாங்கம் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் குறித்த திட்டமானது நாட்டில் உள்ள சிறுவர்களுக்கு 13 வருட கட்டாய கல்வியை கொடுக்க வேண்டும் என்பதற்காக கொண்டுவப்பட்டது.
எவ்வாறாயினும் எதிர்காலத்தில் உயர்தரத்திற்கு 24 பாடநெறிகள் அறிமுகப்படுத்தும்போது குறித்த திட்டமானது பொருந்தும் என தெரிவித்துள்ளார்.