பிரதான செய்திகள்விளையாட்டு

சாதனை படைக்கப் போவது யார்? கறுப்பா? அல்லது வெள்ளையா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

டி20 உலக கிண்ணத்தை 2வது முறையாக வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

டி20 உலக கிண்ணத்தின் இறுதி ஆட்டம் நாளை மறுநாள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.west_england_003

இரு அணிகளும் சம பலத்தில் உள்ளதால் இந்த ஆட்டம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இறுதி ஆட்டத்தில் வென்று டி20 உலக கிண்ணத்தை 2வது முறையாக பெறப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற 5 டி20 உலக கிண்ணம் போட்டிகளில் 2007ஆம் ஆண்டு இந்தியாவும் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தானும் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்தும் 2012 ஆண்டு மேற்கிந்திய தீவுகளும் 2014ஆம் ஆண்டு இலங்கையும் உலக கிண்ணத்தை வென்றுள்ளன.

இந்நிலையில் தற்போது மேற்கிந்திய தீவுகள் அல்லது இங்கிலாந்து ஆகிய அணிகளில் ஏதாவது ஒன்று உலக கிண்ணத்தை இரண்டாவது முறையாக வெல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Related posts

ஹக்கீம் கும்பிடு படம்! SLTJ எதிர்ப்பு வரும் என்றால் மார்க்கத்தை சொல்லமாட்டார்கள்.

wpengine

மலசல கூடத்திற்கு பழியான மூன்று வயது அஷ்ரப் நகர் ஹிமாஸ்

wpengine

பிரம்பால் அடித்த 9வயது சிறுமி மரணம்

wpengine