பிரதான செய்திகள்

சஹ்ரானுடன் தொடர்பு! புத்தளம் மத்ராஸாவில் இருவர் கைது

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிம் புத்தளத்தில்  உரையாற்றியதாக கூறப்படும் மதராஸா பாடசாலையில் பணியாற்றிய இருவர் சி.ஐ.டியினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சஹ்ரான் இந்த மதராஸா பாடசாலைக்குச் சென்று அங்கிருந்த மாணவர்களிடையே உரையாற்றியிருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்தே, 
சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

26,27 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related posts

மன்னாரில் பெருநாள் தொழுகை! மியன்மார் முஸ்லிம்களுக்கு விஷேட பிராத்தனை

wpengine

பேஸ்புக் மீதான தற்காலிக தடை நீக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

wpengine

மீன் ஏற்றுமதி தடை! ஐரோப்பிய ஒன்றியத்தி்னால் நீக்கம்

wpengine