பிரதான செய்திகள்

சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலையில் இலங்கை பெண்கள்

சவூதி அரேபியாவில் நிர்க்கதி நிலையில், பெண்கள் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள பெண்களை மீட்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நடவடிக்கைகளை ஒரு வார காலத்திற்குள் மேற்கொள்ளவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு கண்காணிப்பு அமைச்சர் ஹெட்டர் அப்புகாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சட்டவிரோதமான முறையில் ஆட்கடத்தல்களில் ஈடுபடும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் மோசடிகளை செய்யும் முகவர் நிறுவனங்களை தடைசெய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளத்தில் சவூதி அரேபியாவில் நிர்க்கதியாக உள்ள பெண்கள் தொடர்பில் காணொளி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த காணொளியில் பெண்கள் நலன்புரி நிலையம் ஒன்றில் பல பெண்கள் தங்கியிருப்பதாகவும், அவர்கள் பத்துப் பதினைந்து வருடங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படாது ஏமாற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

Related posts

வாக்களிக்க முயற்சிக்குமாறு வாக்காளர்களிடம் கோரிக்கை

wpengine

பொதுநூலகத்தின் இரகசிய கண்காணிப்பு கமராக்கள் திருட்டு

wpengine

முதன்மை பல்கலைக்கழகமாக பெயரிடப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகம்!

Editor