Breaking
Tue. Nov 26th, 2024

(அஷ்ரப் ஏ சமத்)

 இலங்கை அரசினதும்  சவுதி அரேபியா அபிவிருத்தி நிதியத்தினதும் நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை தேசிய  மருத்துவமனையில் ”வலிப்பு நோய் சிகிச்சை நிலையம்” 8 மாடிகளைக் கொண்டது.  சவுதி அரேபியா  3963 மில்லியன் ருபாவும் இலங்கை அரசு 645 மில்லியன் ருபா செலவில் இப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டு்ளளது.

 
இந் நிலையைத்தினை அக்டோபா் 24ஆம் திகதி பி.பகல். 04.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, சுகாதார அமைசசா் டொக்டா் ராஜித்த  சேனாரத்தினா, சவுதி அரேபியா துாதுவா் மற்றும் வருகை தந்துள்ள சவுதி அரசின் பிரநிதிகள் பங்கு பற்றுதலோடு திறந்து வைக்க்ப்படுகின்றது.

 
உலகில் வாழும் மக்களில்  50 மில்லியன் போ்  காக்கை வலிப்பு (பிட்) நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனா். என உலக சுகாதார அறிக்கையில் தெரிவிக்க்பட்டுள்ளது. அந்த  வகையில் இலங்கையில் 2 இலட்சதது 50 ஆயிரம் வரையிலனோா் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு்ளளது. தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் வாராந்தம் 20 பேர் இந் நோயினால் பாதிக்கப்பட்டு பதியப்படுகின்றனா்  வாராந்தம் 150-200 பேர் கிளினிக் சிகிச்சைக்காக வருகை தருகின்றதாகவும்  டொக்டா் சுனேத்திரா சோனாநாயக்க தெரிவித்தாா்.

 

 
இலங்கையில் இதுபோன்ற நவீன வைத்தியசாலை இதுவரை இருந்ததில்லை. இதுவே முதற்தடவையாக நவீன இயந்திரங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.  தணியாா் வைத்தியசாலையில் பெட் ஸ்கானுக்காக 1 இலட்சததிற்கு 50 ஆயிரம் அரவிடுகின்றனா்,  எம். ஆர். ஜ. க்காக 25 ஆயிரம் அரறவிடுகின்றனா். ஆனால் இங்கு இவைகள் நோயாளிகள் இலவசமாக சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.  இத்துறை சாா்ந்த வைத்தியா்கள் 5 போ் உள்ளனா்.  டொக்டா்களான  சனேத்திரா, அனில் சில்வா ,  பத்மா குணரத்தின,  சுதத் குணசேகர ஆகியோா் உள்ளனா், 
 
 இதற்காக இலங்கையில் இதுவரை சகல வசதிகள் உபகரணங்கள் கொண்டதொரு தனியான  வைத்தியசாலை யோ ஆராய்ச்சி நிலையமோ இருக்க வில்லை. இத்திட்டத்திற்காக  இலஙகை அரசாங்கம் தயாரித்த திட்ட அறிக்கை சவுதி அபிவிருத்தி நிறுவனத்திடம் உதவிபடி அல்லது வட்டியில்லா கடன் வழங்குமாறு தற்போதைய ஜனாதிபதி  சுகாதார அமைச்சராக பதவி வகித்த காலத்தில் கையளிக்க்ப்பட்டது.

 

 
இதற்காக தேசிய  வைத்தியசாலையில்  இருந்த காணியில் 8 மாடிகளைக் கொண்ட கட்டிடமும்  அதற்கான நவீன இயந்திரங்களும் நிர்மணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு  சவுதி அரசும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக இத்திட்டத்தின் பணிப்பாளா் பொறியியலாளா்  .  இத்திட்த்திற்காக சவுதி அராசாங்கம்  துருக்கி நாட்டு பொறியியல் கம்பணியும் இலங்கையில் சீரா கம்பணியுடன் இனைந்து கட்டிடம் 8 மாடிகள்  அத்துடன  எம்.ஆர். ஜ ஸ்கானா், ரேடியோகிராபா், டி.எஸ்.ஏ  பெட் ஸ்கானா், ஸ்பெக்டா, 75 கட்டடிகள் கொண்ட வாா்ட், போன்ற நவீன  மெசின்கள் பொருத்தப்பட்டுள்ளன.  ஒவ்வொரு மெசின்கள் ஜோ்மன் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டு  40-70 கோடி ருபா பெறுமதி கொண்டவை. 
 
சவுதி அரேபியா 3963 மில்லியன் ருபாவும் இலங்கை 645 மில்லியன்ருபா செலவில் இந் நிலையம் நி்ர்மாணிக்கபட்டுள்ளது. சவுதி அரேபியா இலங்கை மக்களுக்கு வழங்கு உண்னத சேவைக்கு நாம் என்றென்றும்  நன்றியுடையவா்களகாக இருததல் வேண்டும். ஏற்கனவே இவ் வைத்தியசாலையில் இது போன்ற வட்டியில்லா கடன் திட்டத்தில் மேலும் ஒரு வைத்தியசாலை பிரிவை அமைத்துக் கொடுத்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது என பொறியியலாளா் யுசுப் தெரிவித்தாா்.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *