சவுதி அரேபியாவின் – ஒலேய்யா பபா என்ற முகாமில் இருந்த போது உயிரிழந்த இலங்கைப் பெண் குறித்து விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் குறித்த மரணத்திற்கான காரணம் வௌியிடப்படும் என, இலங்கைக்கான சவுதித் தூதுவர் அசீம் தாசிம் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹட்டன் – மஸ்கெலியா – ஸ்டெர்ஸ்பி சூரியகந்த (லேட்புரூக்) தோட்டத்தில் இருந்து 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பழனியாண்டி கற்பகவள்ளி என்ற பெண் சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார்.
மூன்று பிள்ளைகளின் தாயான இவரை, கொழும்பில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்று தொழிலுக்காக அனுப்பி வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
ஆனால் இந்த பெண் கடந்த மாதம் 31ம் திகதி சவுதி அரேபிய நாட்டின் றியாத் பிரதேசத்தின் ஒலேய்யா பபா என்ற முகாமில் இருந்த வேளையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.