அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

சலுகை விலையில் புத்தாண்டு உணவுப்பொதி, தேர்தல் ஆணைக்குழுவாள் இடைநிறுத்தம்..!

தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதிகள் வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பிறகு உணவுப் பொதியை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வர்த்தக, வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய “பருவகால உணவுப் பொதியை 2,500 ரூபாவுக்கு ஏப்ரல் 1 முதல் 13 வரை லங்கா சதோசா மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தை தற்போது இடைநிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

பர்தாவை கழற்றிவிட்டு பரீட்டை எழுதுங்கள் கம்பளையில்

wpengine

லங்கா பிரீமியர் லீக் அட்டவணை வெளியானது!

Editor

கொழும்பு அரசியலில் பரபரப்பு அடங்கவில்லை.

wpengine