பிரதான செய்திகள்

சற்றுமுன்பு மறியல் போராட்டகாரர்களால் ஹுனைஸ் எம்.பி விரட்டியடிப்பு

வில்பத்துக்கு வடக்கே உள்ள முஸ்லிம்களின் பூர்வீக காணிகளை கையகப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வர்த்தமானி  அறிவித்தலை ரத்து செய்யுமாறு அந்த பிரதேச மக்களினால் மறிச்சிக்கட்டியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போரட்ட இடத்துக்கு சென்ற முன்னாள் எம் பி ஹுனைஸ் பாரூக்கை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் விரட்டி அடித்தனர்.

“எமது உண்மையான போராட்டத்தை கொச்சைப்படுத்தி தனியார் ஊடகங்களிலும் கல்முனை,பொத்துவில் முஸ்லிம்காங்கிரஸ் கூட்டங்களிலும் கேவலமாக உரையாற்றியதோடு வில்பத்து பிரச்சினையை நாங்கள் தான் வேண்டும் என்றே பிரச்சினையாக்குவதாக கூறிய உங்களுக்கு இங்கு என்ன வேலை?” என ஆவேசத்துடன் கேட்டனர். தயவு செய்து இந்த இடத்தில் நிற்கவும் வேண்டாம். எமது போராட்டத்தை குழப்பும் வகையில் எங்களை ஆத்திரப்படுத்த வைக்கவும் வேண்டாம். இந்த இடத்தை விட்டு உடனடியாக சென்றுவிடுவது உங்களுக்கும் நல்லது. எங்களுக்கும் நல்லது என உரத்துப்பேசினர்”

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள்  எம்.பி ஹுனைசும் அந்த மக்களை ஏசியதுடன் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்ததாக பாலைக்குளி பள்ளிவாசல் சங்க நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

மீராவோடை அஸ்-ஷபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இப்தார் (படம்)

wpengine

தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியது! தமிழ் தேசிய கூட்டமைப்புமே

wpengine

தேர்தலுக்கான பெயரை மாற்றும் கட்சி

wpengine