Breaking
Mon. Nov 25th, 2024

இலங்கையின் செய்தித்துறை வரலாற்றில் பல ஜாம்பவான்களை உருவாக்கிய மூத்த ஒலிபரப்பாளர் சற்சொரூபவதி நாதனின் மறைவு ஒலிபரப்புத்துறையில் ஈடு செய்ய முடியாததென்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவரது மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

சற்சொரூபவதி நாதன் பன்முக புலமை கொண்ட ஒர் ஒலிபரப்பாளர். செய்திகள் வாசிப்பில் உச்ச புகழைப் பெற்றிருந்த அவர் கலை, கலாசார விடயங்களிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தியவர். சமய பக்தராகவும் இருந்தார். அவர் ஒரு பல்கலைக்கழக பட்டதாரி.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் அவர் பணியாற்றிய காலங்களில் நன்மதிப்புடனும் சேவை மனப்பாங்குடனும் செயற்பட்டவர். செய்திகள் வாசிப்பில் அவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார். அவரது கணீரென்ற குரலை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் உருவாகியிருந்தது.

சற்சொரூபவதி நாதனின் இனிமையான குரல் காற்றிலே பரவி வரும்போது ஒலிபரப்புக் கூட்டுத்தாபன செய்திகள் ஒலிபரப்பப்படுகின்றது என்ற நிலையே ஒரு காலத்தில் இருந்தது. நாட்டு நடப்புக்களை அறிவதற்கு ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தைத் தவிர எந்த விதமான ஊடகங்களும் இல்லாத அந்த கால கட்டத்தில் சற்சொரூபவதி நாதனின் செய்திகளில் ஒரு தனி ரகம் இருந்தது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சிறந்த பன்முக ஆளுமை படைத்த ஒருவரை இன்று இழந்து தவிக்கின்றது. அன்னாரின் குடும்பத்தவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கின்றேன்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *