பிரதான செய்திகள்

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி

சர்ச்சைக்குரிய வைத்தியர் சியாப்தீன் மொஹமட் சாபி தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.
மோசடியான முறையில் சொத்து சேகரித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு அவர் குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

42 வயதான குறித்த வைத்தியர் பல்வேறு சட்டவிரேத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சியாப்தீன் மொஹமட் சுமார் எட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளார் என குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியரிடம் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களிடம் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வேறு சில சட்டவிரோத செயற்பாடுகள் தொடரபிலும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலில் குருணாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்து ஐக்கிய தேசிய கட்சியின் இலக்கம் 18 இல் போட்டியிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வைத்தியர் தொடர்பான மோசடிகளை முதலில் திவயின பத்திரிகை வெளியிட்டிருந்தது.

முன்னதாக நான்காயிரம் பெண்களுக்கு அறுவை செய்யப்பட்டதாக தகவல் வெளியிட்டிருந்தது. எனினும் இன்றைய தினம் வெளியான பத்திரிகையில் எட்டாயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்தமை தொடர்பில் குறித்த வைத்தியர் ஏற்றுக்கொண்டதாக திவயின செய்தி வெளியிட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமாகாண சபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரனால் மூடப்பட்ட வவுனியா பூங்கா

wpengine

கிழக்கில் மீண்டும் தமிழ் முஸ்லிம் இனக்கலவரம் தூண்டப்படுகின்றதா?

wpengine

திரவ நைட்ரஜன் பசளையின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்தது.

wpengine