பிரதான செய்திகள்

சம்மாந்துறை பெரிய தப்லீக் அலியார் ஹஸரத்தின் மறைவுக்கு அமைச்சர் றிஷாத் அனுதாபம்

பெரிய ஹஸரத் என எல்லோராலும் கண்ணியமாக அழைக்கப்படும் அல்ஹாஜ் ஷேகுத் தப்லீக் அலியார் ஹஸரத் அவர்கள் வபாத்தான செய்தி தனக்கு கவலை அளிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

சம்மாந்துறையின் மூத்த ஆலிம்களில் ஒருவராகவும் தப்லீகுள் இஸ்லாம் அரபிக் கல்லூரியின் ஸ்தாபராகவும் பணியாற்றிய பெரிய ஹஸரத் சம்மாந்துறை மண்ணின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தவர். அந்த ஊரின் பெருமையை இவர் மூலம் துலங்கியது என்றால் அதற்கு மாறுபட்ட கருத்துக்களுக்கு இடமில்லை.

சம்மாந்துறை என்றால் புரியாத வெளியூர் முஸ்லிம்களிடம் அலியார் ஹஸரத்தின் ஊர் என்றார் இலகுவாக புரிந்துவிடும் அளவுக்கு அவர் சமூகப்பணிகளிலும் ஆத்மீகப்பணிகளிலும் மார்க்கப்பணிகளிலும் திகழ்ந்து விளங்கியவர். அவரது இழப்பால் கவலையுறும் சம்மாந்துறை மக்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றேன்.

அல்லாஹூத்தாலா

அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமை வாழ்வை ஒளிபெறச் செய்வானாக.

Related posts

முஸ்லிம்கள் மீதான தாக்குதல் முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும்

wpengine

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில் சாணக்கியன்!

wpengine

நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வவுனியா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்.

Maash