செய்திகள்பிரதான செய்திகள்

சம்மாந்துறை சலூனில் 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் சடலம் மீட்பு!

சம்மாந்துறை விளினையடி சந்தியில் உள்ள சிகை அலங்கார கடையொன்றில் (Saloon) 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் சற்றுமுன் சடலம் மீட்பு!

2025/04/15 இன்று மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலை அடுத்து

50 வயது மதிக்கத்தக்க இந்த ஆண் சடலமானது அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை விளினையடி சந்தியில் உள்ள அவரின் கடைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாடகை கடையில் சிகை அலங்கார கடை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. இவர் ஏறாவூரைச் சேர்ந்தவர் என பொதுமக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வேலையின் நிமித்தம் இவர் சம்மாந்துறையில் சிகை அலங்கார கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். கதிரையில் சாய்ந்து இருப்பது போன்று மூடப்பட்ட அவரின் கடைக்குள்

சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடை வேலைகளை முடித்து கடையறைக்குள் இரவு தூக்கத்தை கழிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவ்வாறான நிலையில் மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது

சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

வாழ்க்கையை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்தும் போதும் வடக்கு மற்றும் தெற்கு பேதம் இல்லை

wpengine

பதினெட்டே மாதங்களில் 31 கிலோ; அரிய நோயால் பாதிக்கப்பட்ட ‘யாகிஸ்’

wpengine

11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளது! சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

wpengine